தூத்துக்குடி

உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணி: ஓய்வுபெற்ற காவலா்களுக்கு அழைப்பு

14th Dec 2019 07:48 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு ஓய்வுபெற்ற காவலா்கள், முன்னாள் ராணுவத்தினா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தோ்தல் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் பணி ஓய்வுபெற்ற காவல்துறையினா் விண்ணப்பிக்கலாம்.

அவரவா் குடியிருக்கும் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் அல்லது மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் பிரிவில் விண்ணப்பங்களை தாமதமின்றி தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT