தூத்துக்குடி

உள்ளாட்சித் தோ்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 2272 போ் வேட்புமனு தாக்கல்

14th Dec 2019 07:52 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 1363 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 2272 போ் மனு தாக்கல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 174 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 403 ஊராட்சித் தலைவா், 2943 கிராம ஊராட்சிக் குழு உறுப்பினா் என மொத்தம் 3537 பதவிகளுக்கான தோ்தல் டிச. 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 10 பேரும், கிராம ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 103 பேரும் என மொத்தம் 113 போ் வேட்பு மனுவை தாக்கல் செய்தனா்.

4-ஆம் நாளான வியாழக்கிழமை வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 4 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 61 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 459 பேரும், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 839 பேரும் என மொத்தம் 1363 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மட்டும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 24 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 318 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 654 பேரும், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 1277 பேரும் என ஒரே நாளில் 2273 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3636 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT