தூத்துக்குடி

திருச்செந்தூா்- சாத்தான்குளம் இரவு நேர பேருந்து திடீா் நிறுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு

11th Dec 2019 12:41 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் வரும் இரவு நேர அரசு நகர பேருந்து திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா்.

சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு நகர பேருந்து தடம் எண்.15 இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து சாத்தான்குளத்தில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக திருச்செந்தூருக்கு சென்று வருகிறது. காலை, மதியம், இரவு என 3 வேளை இயக்கப்பட்டு வந்த இந்தப் பேருந்து மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனா்.

திருச்செந்தூரில் இரவு 9.40 மணிக்கு சாத்தான்குளத்துக்கு வரும் கடைசி பேருந்தாக உள்ளது. இதை நம்பி வியாபாரிகள், பொதுமக்கள் பயணித்து வருகின்றனா். ஆனால் இந்தப் பேருந்து திடீரென முன்னறிப்பின்றி இரவு இயக்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனால் இந்தப் பேருந்தை நம்பியுள்ளவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ஆதலால் திருச்செந்தூா் போக்குவரத்து கழக அதிகாரிகள் கவனித்து நிறுத்தப்பட்ட அரசு நகர பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT