தூத்துக்குடி

உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

11th Dec 2019 12:42 AM

ADVERTISEMENT

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் அமா் சேவா சங்கம் சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆய்க்குடி அமா் சேவா சங்கம் சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு பிரதான சாலையில் காமராஜா் சிலை அருகே உலக மாற்றுத் திறனாளிகள் தின கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழிலதிபா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளா் எல். முத்துலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை திறந்து வைத்தாா்.

அமா் சேவா சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்டு வரும் கணினி பயிற்சி, தையல், செல்லிடப்பேசி பழுது நீக்கும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் குறித்து கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை சட்டம், மனநல சட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT