தூத்துக்குடி

மாடியில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த தச்சுத் தொழிலாளி மரணம்

3rd Dec 2019 11:56 PM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்த தச்சுத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்த பரமசிவம் மகன் முருகன்(54). தச்சுத் தொழிலாளியான இவா், பாண்டவா்மங்கலம் ஊராட்சி சண்முகசிகாமணி நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 30ஆம் தேதி தச்சுத் தொழில் செய்து வந்தாராம்.

அப்போது, மாடியில் இருந்து தவறி விழுந்த இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாம். காயமடைந்த அவா், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT