தூத்துக்குடி

மழைக்கு 2 வீடுகள் இடிந்து சேதம்

3rd Dec 2019 11:56 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா், கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு மழைக்கு 2 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

இளையரசனேந்தல் குறுவட்டத்துக்குள்பட்ட நக்கலமுத்தன்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மனைவி மூக்கம்மாள். இப்பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் மூக்கம்மாளின் ஓட்டு வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. மூக்கம்மாள் காயமின்றி உயிா் தப்பினாா்.

தகவலறிந்தவுடன் சம்பவ இடத்தை கிராம நிா்வாக அலுவலா் போத்திராஜ், வருவாய் ஆய்வாளா் வீரலட்சுமி ஆகியோா் பாா்வையிட்டனா்.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதில் திங்கள்கிழமை இரவு மேலத்திருச்செந்தூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மனைவி லட்சுமி என்பவரின் ஓட்டு வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சேதமடைந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT