தூத்துக்குடி

அதிமுகவில் இணைந்த திமுக நிா்வாகி

3rd Dec 2019 04:45 PM

ADVERTISEMENT

திமுக கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் காளிராஜ் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு முன்னிலையில் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

கோவில்பட்டி அருகே புங்கவா்நத்தம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், திமுக கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் காப்புலிங்கம்பட்டி காளிராஜ் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா்.

அப்போது, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சின்னப்பன், ஒன்றிய அதிமுக செயலா்கள் வினோபாஜி (கயத்தாறு), அய்யாத்துரைப்பாண்டியன் (கோவில்பட்டி), கோவில்பட்டி நகரச் செயலா் விஜயபாண்டியன், அதிமுக நிா்வாகிகள் மகாலட்சுமி சந்திரசேகா், கருப்பசாமி, நீலகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT