தூத்துக்குடி

மதுக்கூடத்தில் தகராறு: கட்டடத் தொழிலாளி கைது

30th Aug 2019 07:26 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள மதுபானக்கூடத்தில் தகராறில் ஈடுபட்டதாக கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டார். 
கோவில்பட்டி, இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் மகன் அரசுப்பாண்டியன்(42). கட்டடத் தொழிலாளி. இவர், கடலையூர் சாலையில் உள்ள மதுபானக் கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார். அப்போது  அவரிடம், வள்ளுவர் நகர் சிவாஜி நகரைச் சேர்ந்த துரைப்பாண்டி மகனான மற்றொரு கட்டடத் தொழிலாளி அனந்தமாரியப்பன்(36) மதுக்குடிக்க பணம் கேட்டாராம். அதற்கு அரசுப்பாண்டியன் மறுத்தாராம். உடனே, அவரை அனந்தமாரியப்பன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து,  அனந்தமாரியப்பனை புதன்கிழமை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT