நாசரேத் வாரச் சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் ம. ரெங்கசாமி தலைமையில், சுகாதார ஆய்வாளர் பால்ஆபிரகாம் உள்ளிட்ட குழுவினர், பேரூராட்சிக்குள்பட்ட வாரச்சந்தை பகுதியில் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.