நாசரேத் வட்டார அளவிலான தடகளப் போட்டியில் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
நாசரேத் வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்றன. இதில் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 35-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
இப்பள்ளி 78 புள்ளிகள் எடுத்து வட்டார அளவில் 2ஆம் இடம் பிடித்தது. போட்டியில் வென்ற மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் ஜார்ஜ் ஹெஸ்டிங்ஸ் பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் ஜோசப் ரவிபாலன் உள்ளிட்டோர்
பாராட்டினர்.