எட்டயபுரம் வட்டம், கீழஈராலில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், சமூக நலத்திட்ட உதவிகள், வாருகால், தார்ச்சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்து, விரைந்து தீர்வு காண ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து கீழ ஈரால் கிராமத்தில் உள்ள வேல் வெள்ளைச்சாமி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவ -மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதை பார்வையிட்டார். சத்துணவு மையத்தில் தயாரிக்கப்படும் உணவின் தரத்தினை பரிசோதித்தார். அப்போது, துணை வட்டாட்சியர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.