தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் ஆகியன சார்பில் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஆ.ரவி தலைமை வகித்தார். சங்கச் செயலர் வேல்ராஜ், பொருளாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் பங்கேற்று பேசினார். கூட்டத்தில், வியாபாரிகள் சங்க முன்னாள் செயலர் கந்தன், சமூக ஆர்வலர் குணசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.