தூத்துக்குடி

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

28th Aug 2019 07:32 AM

ADVERTISEMENT

வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி வட்டார அளவிலான வாலிபால் போட்டியில் 19 வயதுக்குள்பட்டோர்  பிரிவில், புனித லசால் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தைப் பிடித்தது. 
இதேபோல, கூடைப்பந்து போட்டியில் 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் கிரஸன்ட் பள்ளி அணியை வீழ்த்தி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தைப் பிடித்தது. மேலும்,  தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முருகதுரை மற்றும் கார்த்திகேயன், பெலிக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதில், மாணவர் முருகதுரை மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதையடுத்து, விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரான முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர்,  உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொணடனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT