தூத்துக்குடி

தூத்துக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை

28th Aug 2019 10:48 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகேயுள்ள மாதாநகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சரவணன் (35). இவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தூத்துக்குடி கேவிகேநகர் பகுதியில் வசித்து வந்தார். சரவணன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சரவணன் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் திடீரென வீட்டுக்குள் புகுந்தனராம். பின்னர், சரவணனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம். இதில், சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிரகாஷ் மற்றும் மத்தியபாகம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. கொலையுண்ட சரவணன் மீது கொலை வழக்கு உள்ளதால், அவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT