தூத்துக்குடி

பன்னம்பாறையில் விவசாயிகளுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி

27th Aug 2019 08:25 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத் துறையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி பன்னம்பாறை கிராமத்தில் நடைபெற்றது. 
பயிற்சியை வேளாண்மை அலுவலர் சுஜாதா தலைமை வகித்து தொடங்கி வைத்து கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அரசின் மானிய திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.  செட்கோ தொண்டு நிறுவனத்தின் களப்பணியாளர் சரோஜா,  குழுக்களின் தலைவர்,  செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோரின் பணிகள் மற்றும் பேரேடுகள் பராமரிப்பு குறித்தும் விளக்கம் அளித்தார். 
செட்கோ தொண்டு நிறுவனத்தின் மேலாளர் இன்பராஜ் விவசாயிகளுக்கு முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) லெட்சுமி, கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் விவசாயிகள் உற்பத்தியாளர் குழு மற்றும் உற்பத்தியாளர் கம்பெனி உருவாக்குதல் மேலும் வேளாண் வணிகத் துறையில் அரசின் மானியத் திட்டங்கள் பற்றி  எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT