திருச்செந்தூர் வட்டார தமிழ்நாடு நுகர்வோர் பேரவைக் கூட்டம் சேர்ந்தபூமங்கலத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் அ.வீ.பா.மோகனசுந்தரம் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆறுமுகனேரி பூங்காவில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும்; பராமரிப்பில்லாத பூங்காவை சீரமைப்பதுடன் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்த பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்; சேர்ந்தபூமங்கலம் நான்கு ரத வீதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்ட ஆலோசகர் ஜே.எஸ்.டி.சாத்ராக், வட்டாரப் பொறுப்பாளர் டி.தங்கத்துரை, சேர்ந்தபூமங்கலம் நகர அமைப்பாளர் சி. லிங்கத்துரை, செயலர் டி.பெரியசாமி, துணைத் தலைவர் டி.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நகரத் தலைவர் ஏ.தங்கராஜ் நன்றி கூறினார்.