தூத்துக்குடி

தென்னை மரங்களை சேதப்படுத்திய மரநாய்கள் மீட்பு

27th Aug 2019 08:20 AM

ADVERTISEMENT

உடன்குடி பகுதியில் தென்னை மரங்களில் சேதங்களை ஏற்படுத்திய மரநாய்களை திருச்செந்தூர் வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
      உடன்குடி சிதம்பரத்தெரு பகுதியில் உள்ள தென்னை மரங்களை மரநாய்கள் கடித்து சேதப்படுத்துவதாக     அப்பகுதி மக்கள் திருச்செந்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அப்பகுதிக்கு வந்த திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரன்,வனவர்கள் ஆனந்த், ரத்தினம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் இரண்டு மர நாய் குட்டிகளை  பிடித்தனர்.  அவை பின்னர் வனப் பகுதியில் விடப்பட்டன. இது குறித்து வனச்சரக அலுவலர் ரவீந்திரன் கூறுகையில்,  தப்பியோடிய பெரிய மரநாயை பிடிப்பதற்காக இரண்டு பெரிய மரக்கூண்டுகள் தெருவில் வைக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT