தூத்துக்குடி

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் செயல் திறன் விழிப்புணர்வு முகாம்

27th Aug 2019 08:23 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் செயல் திறன் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை நேரு கல்விக் குழுமம் மற்றும் சில நிறுவனங்களின் உதவியுடன் ஏ.பி.ஜே.கலாம் விஷன் அமைப்பு சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, பள்ளித் தலைமையாசிரியர் முனியசாமி தலைமை வகித்து, அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஏ.பி.கே. கலாம் விஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயராஜகுமார், பொறியாளர்கள் மனோ ராஜபால், எடிசன், மணிவேல், செந்தில்குமார், சந்திரபாபு உள்ளிட்டோர் ஆளில்லாத விமானம் பறக்கும் விதம், ஏவுகணை, ரோபோ செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
இத்தகைய விழிப்புணர்வு முகாம், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி மற்றும் கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் திங்கள்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT