தூத்துக்குடி

அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் நியமனம் செய்ய மதிமுக வலியுறுத்தல்

27th Aug 2019 08:19 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் என மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  
கூட்டத்துக்கு, நகரச் செயலர் எஸ்.பால்ராஜ் தலைமை வகித்தார். வார்டு நிர்வாகிகள் செல்லப்பாண்டியன், ராமசாமி, ராமகிருஷ்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரும், மதுரை மாநகர மாவட்டச் செயலருமான மு.பூமிநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன் ஆகியோர் பேசினர். 
மாநில கலைத் துறை துணைச் செயலர் பொன்ஸ்ரீராம், மாநில நிர்வாகிகள் பி.வி.சிவகுமார், எஸ்.தெய்வேந்திரன், ஆ.மோசஸ் சுந்தரம், வனராஜன், லவராஜா, மூக்கையா, முத்துப்பாண்டியன், முத்துச்செல்வன், பவுன்மாரியப்பன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
தீர்மானங்கள்: சென்னையில் செப். 15 இல் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் மாநாட்டிற்கு அதிக வாகனங்களில் செல்வது; இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வேண்டும்; நகராட்சியின் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; 
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணர், இருதய சிகிச்சை மருத்துவ நிபுணர், பணியாளர்கள்
நியமனம் செய்ய வேண்டும்; மூப்பன்பட்டி கண்மாயை தூர் வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT