தூத்துக்குடி

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆக. 29 இல் ஏலம்

23rd Aug 2019 07:25 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்  இம்மாதம் 29 ஆம் தேதி ஏலம்விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:   தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 14 இன் படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்ட மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு 2 ஆட்டோ மற்றும் 45 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 49 வாகனங்கள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக பகிரங்க ஏலத்தில் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் தகுந்த முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் விடப்படும் வாகனங்கள் மற்றும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 0461 2340300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
அந்த வாகனங்களை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து அனுமதி பெற்று அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு ஆட்டோவும், குளத்தூர் காவல் நிலையத்தில் ஒரு ஆட்டோவும் உள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT