தூத்துக்குடி

தூத்துக்குடி, கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

23rd Aug 2019 07:29 AM

ADVERTISEMENT

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில்  மாநகர் மாவட்ட காங்கிரஸ்  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் மாவட்டத் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஏபிசிவீ சண்முகம்,  சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் எஸ். டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோர்  உரையாற்றினர். மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் டேவிட் பிரபாகரன், சவரியானந்தம், மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் ஏடிஎஸ் அருள், முன்னாள் கவுன்சிலர் சந்திரபோஸ்,  சாமுவேல் ஞானதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சண்முகராஜ், வட்டாரத் தலைவர் ரமேஷ்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டத் தலைவர் காமராஜ், துணைத் தலைவர் ராமசந்திரன், மாவட்ட வர்த்தகப் பிரிவுத் தலைவர் ராஜா, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், உமாசங்கர், மகேஷ்குமார், மாவட்டப் பொதுச் செயலர் முத்து, ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT