தூத்துக்குடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்

23rd Aug 2019 07:27 AM

ADVERTISEMENT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார்.
மத்திய கப்பல் மற்றும் ரசாயனம், உரத் துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா வியாழக்கிழமை மாலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோயிலில் மூலவர், சண்முகர், குருபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்;னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணித் தலைவர் ஏ.என்.ராஜகண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.செந்தில்வேல், மாவட்ட மகளிரணி பொதுச் செயலர் கு.நெல்லையம்மாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய பொதுச் செயலர் சுந்தர் உள்ளிட்டோர்  வந்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT