தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா

23rd Aug 2019 07:28 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே பிடானேரி சமத்துவபுரத்தில் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினவிழா நடைபெற்றது. 
தூத்துக்குடி மாவட்ட சர்வோதய மண்டல் மற்றும் எழுவரைமுக்கி பூமிதான கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு சாத்தான்குளம் வட்டார சர்வோதய மண்டல் தலைவர்  ஜி. சிவகணேசகுமார் தலைமை வகித்தார்.தூத்துக்குடிதெற்கு மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவர் வி.எஸ். முருகேசன் முன்னிலை வகித்தார். இதில்  தமிழ்நாடு சர்வோதய மண்டல் தலைவர் க.மு.நடராஜன், செயலர் எஸ்.டி. ராஜேந்திரன், தமிழ்நாடு பூமி தான வாரிய உறுப்பினர்கள் என். சுந்தரராஜன், கே.ஆர்.கண்ணன் ,மாவட்ட பாஜக  துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் பேசினர். 
கூட்டத்தில் திருச்செந்தூர் சர்வோதய மண்டல் செயலர் டி.மீனாட்சிசுந்தரம், கருங்குளம் வட்டாரத்  தலைவர் எஸ். ராமகிருஷ்ணன், கோவில்பட்டி வட்டாரச்  செயலர் பி. மாரிமுத்து, எழுவரைமுக்கி பூமிதான கூட்டுறவு சங்கப் பொருளாளர்  டி. சுகுமார், உறுப்பினர் அமச்சியார், உடன்குடி சர்வோதய மண்டல் தலைவர் சி.  மனோன்மணி, ஓட்டப்பிடாரம் மண்டல் செயலர் கந்தசாமி, கயத்தாறு மண்டல் தலைவர் அய்யம்மாள்,  எழுவரைமுக்கி பூமிதான கூட்டுறவு சங்கச் செயலர் ஜி. இம்மானுவேல் இன்பராஜ், துணை செயலர்  கே.சரவணன், உறுப்பினர் சீ. முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தூத்துக்குடி  மாவட்ட சர்வோதய மண்டல் செயலர் வி.முருகன் வரவேற்றார்.  மாவட்டத்  தலைவர் பொன்.கந்தசாமி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT