தூத்துக்குடி

ஆலந்தலை அற்புதக்கெபி திருவிழா கொடியேற்றம்

23rd Aug 2019 07:23 AM

ADVERTISEMENT

திருச்செந்தூர் ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபியின் 91-ஆவது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, புதன்கிழமை மாலை 6 மணிக்கு பரி ரொசாரி மாதா சபையினர் கொடியை ஆலயத்தில் இருந்து எடுத்து முக்கிய வழியாக ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். அதைதொடர்ந்து கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் பங்குத்தந்தைகள் அடைக்கலாபுரம் செட்ரிக்பீரிஸ், ரீத்தம்மாள்புரம் இருதயராஜ் ஆகியோர் மறையுரையாற்றினர். 
விழாவின் முக்கிய நாளான 10-ஆம் திருநாள்(ஆக.30)   அதிகாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருள்பணி வில்லியம் சந்தானம் தலைமையில் முதல் திருப்பலியும், காலை 7மணிக்கு தூத்துக் குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருத்தல பங்குத் தந்தையர்கள், அருள்அன்னையர்கள், ஊர் நலக்கமிட்டியினர், திருத்தல நிதிக்குழுவினர், பக்த சபையினர் மற்றும்  பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT