கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. சனிக்கிழமை மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தெற்கு திட்டங்குளம், கொடுக்காம்பாறை, வடக்கு திட்டங்குளம், விஜயாபுரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, பின்னர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மேற்கு ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், நகரச் செயலர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.