தூத்துக்குடி

கோவில்பட்டியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

16th Aug 2019 09:48 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலக வளாகங்களில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிகண்டன், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் (பொ)  கோவிந்தராஜன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை உறைவிட அதிகாரி பூவேஸ்வரி முன்னிலையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கோட்டப் பொறியாளர் (பொ) சிந்துஜா, கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நிரஞ்சலாதேவி, சென்ட்ரல் எக்சைஸ் மற்றும் சரக்கு, சேவை வரி அலுவலக வளாகத்தில் கண்காணிப்பாளர் சுந்தரராஜன்,  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துகுமார் ஆகியோர் தேசியக்கொடியேற்றினர். 
கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி எம்.அகிலாதேவி தேசியக் கொடியேற்றினார்.  முன்னாள் ராணுவத்தினர் நல உதவி மைய வளாகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தேசியக் கொடியை ஏற்றினார்.  கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் அரியநாயகம் தேசியக்கொடியேற்றினார்.
கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளர் கதிர்வேல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில்  செயலர் மகேந்திரன் தேசியக்கொடியேற்றி வைத்தார். 
வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில்  பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அன்புராஜ், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை ஜோஸ்பின்மேரி, துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் கல்லூரிச் செயலர் கண்ணன், நாடார் பொதுநல மருத்துவமனையில் தலைவர் திலகரத்தினம், நாடார் நடுநிலைப் பள்ளியில் செயலர் கே.கண்ணன், வணிக வைசிய நடுநிலைப் பள்ளியில் வணிக வைசிய சங்கத் துணைத் தலைவர் காளியப்பன், நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம்,   நாடார் மேல்நிலைப் பள்ளியில்  சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களாத் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில்  சங்கத் தலைவர் பரமேஸ்வரன், ஸ்ரீகரா வித்யா மந்தீர் சிபிஎஸ்இ பள்ளியில் பள்ளி சேர்மன் செந்தில்குமார், நேஷனல் பொறியியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமையில், இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் கர்னல்  கே.ராமசுப்பு, கவுணியன் மெட்ரிக் பள்ளியில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு, புனித ஓம் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் லட்சுமணப்பெருமாள், விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் செயலர் பாலமுருகேசன், வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 
 தாளாளர் நாகமுத்து, ஆவல்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  தூத்துக்குடி தெர்மல் நிலைய ஓய்வு பெற்ற பொறியாளர் வெங்கட்ராமன்,  முடுக்குமீண்டான்பட்டி திருவள்ளுவர் அரங்கு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ஈராச்சி பரிமேலழகர் இந்து தொடக்கப் பள்ளியில் கல்விக் குழுத் தலைவர் குணசேகரன் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT