தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் கிணற்றில் இளைஞர் சடலம் மீட்பு

16th Aug 2019 09:45 AM

ADVERTISEMENT

காயல்பட்டினம் பப்பரப்பள்ளி காட்டுப்பகுதியில் உள்ள  கிணற்றில் அழுகிய நிலையில்  கிடந்த இளைஞரின்  சடலத்தை  மீட்டு  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காயல்பட்டினம் வாணியக்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் விஜய்(41). இவருக்கு  திருமணமாகவில்லை. போதை பொருள் பழக்கமுடையவராம்.  இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டைவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை காயல்பட்டினம் ரத்தினாபுரியில் இருந்து பப்பரப்பள்ளி செல்லும் பாதையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகே உள்ள  கிணற்றில்  அழுகிய நிலையில் விஜயின் சடலம் கிடப்பது தெரியவந்ததாம். 
இதையடுத்து போலீஸார்  சம்பவ இடத்திற்கு  சென்று, திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலம் சடலத்தை மீட்டு, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இது குறித்து  புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT