தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே மீன் நிறுவன முகவரிடம் ரூ. 1.50 லட்சம் வழிப்பறி

16th Aug 2019 09:45 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மீன் நிறுவன முகவரை தாக்கி ரூ. 1.50 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி மகன் பாலகங்கா (40).  திருச்சியில் உள்ள கடல் மீன் உணவு ஏற்றுமதி நிறுவனத்தின் முகவராக உள்ளார். இவர் வியாபாரம் தொடர்பாக திருச்சியிலிருந்து தூத்துக்குடிக்கு புதன்கிழமை இரவு காரில் சென்றபோது, எட்டயபுரம் அருகே கார் திடீரென பழுதானது. 
இதனால், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு பாலகங்கா ஓய்வெடுத்துள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பாலகங்காவை தாக்கி, அவரை கட்டிப்போட்டுவிட்டு, காரின் முன்பகுதியில் வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றனராம்.
இதுகுறித்து தகவலறிந்த மாசார்பட்டி போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து, கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT