தூத்துக்குடி

உலக முத்தாரம்மன் கோயில் கொடை விழா

16th Aug 2019 09:45 AM

ADVERTISEMENT

உடன்குடி அருள்தரும் ஜெகநாதர் உடனுறை அருள்மிகு உலக முத்தாரம்மன் திருக்கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி  ஆக.12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு கோலாட்டம், நள்ளிரவு 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை,  கும்பம் வீதியுலா, ஆக.13 ஆம் தேதி கண்டு கொண்ட விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குட ஊர்வலம்,  பிற்பகல் 1 மணிக்கு கும்பாபிஷேக தீபாராதனை,  தொடர்ந்து அம்பாள் உற்சவ தாலாட்டு , நள்ளிரவு 12 மணிக்கு சந்தனக் காப்பு தீபாராதனை, கும்பம் திருவீதியுலா ஆகியன  நடைபெற்றன. ஆக.14 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கும்பம் திருவீதியுலா,  மஞ்சள்  நீராட்டு  நடைபெற்றது. ஏற்பாடுகளை உடன்குடி சைவப்பிள்ளைமார் சமுதாய மக்கள்  செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT