தூத்துக்குடி

மாநில கராத்தே போட்டியில் பிள்ளையார்நத்தம் பெண் சிறப்பிடம்

11th Aug 2019 01:03 AM

ADVERTISEMENT


தஞ்சாவூரில் யா-சூ-கான் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த இளம்பெண் சிறப்பிடம் பெற்றார். 
இப்போட்டியில், கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட இளையரசனேந்தல், பிள்ளையார்நத்தம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர் - மாணவிகள் உள்பட சுமார் 15 பேர் பங்கேற்றனர். அவர்களில், பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த மீனாஜோதி (21) பெண்களுக்கான கட்டா பிரிவில் மாநில அளவில் 3ஆம் இடம் பெற்றார். அவரையும், அவருக்கு பயிற்சியளித்த கராத்தே பயிற்சியாளர் ராமகிருஷ்ணனையும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT