தூத்துக்குடி

திருச்செந்தூரில் வடிகால் ஓடை சீரமைக்கும் பணி

11th Aug 2019 01:07 AM

ADVERTISEMENT


திருச்செந்தூரில் வடிகால் ஓடையில் உள்ள குப்பைகள் மற்றும் அருகே பாலத்தில் நிரம்பியிருந்த மணல் மேடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தின் மறுகால் ஓடை தோப்பூரில் தொடங்கி பாரதியார் தெரு, காமராசர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளை கடந்து ஜீவாநகர் வழியாக கடலில் கலக்கிறது. தற்போது கழிவுநீர் ஓடையாக மாறியுள்ள இந்த ஓடையில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையில், ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமைப் பள்ளி அருகே உள்ள பாலத்தின் அடிப்பகுதியில் மணல் திட்டுகளாலும், கரையோரங்களில் முள்செடிகளாலும் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பேரூராட்சி சார்பில் அதை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியை திருச்செந்தூர் கோட்டாட்சியர் தி.தனப்ரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர், அதனருகே செல்லும் குடிநீர் குழாயின் தன்மை குறித்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகனிடம் கேட்டறிந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT