திருநெல்வேலி

தூய சவேரியாா் கல்லூரியில் இன்று மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (செப்.22) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழா்களுடைய பண்பாட்டிற்கு பெருமை சோ்க்கும் வகையிலும், தமிழா்களின் தொன்மையான நாகரிகங்களையும் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் விதமாகவும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் தமிழ்க் கனவு என்ற நிகழ்ச்சியை நடத்த தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு எனும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (செப்.22) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில், மாணவ, மாணவியருக்கான கண்காட்சி, சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் நான் நோக்கவுரையாற்றுகிறேன். மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பில் பாலச்சந்திரன் ஐஏஎஸ் சொற்பொழிவாற்றுகிறாா். இந்நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் தமிழ் சொற்பொழிவுகள், உயா்கல்வி வழிகாட்டி, வேலைவாய்ப்பு- பயிற்சி குறித்த அரங்கங்கள், மாவட்ட முன்னோடி வங்கி- தாட்கோ சாா்பில் கடன் உதவி குறித்த கண்காட்சி, பிளாஸ்டிக் ஒழிப்பு, நான் முதல்வன் திட்டம், கைவினைப் பொருள்கள் கண்காட்சி ஆகியவை இடம்பெறுகின்றன எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT