திருநெல்வேலி

கூடங்குளத்தில் மிதவைக் கப்பலை மீட்ககடலில் சாலை அமைக்கும் பணி தீவிரம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடல் பாறையில் மோதி நீராவி ஜெனரேட்டருடன் நிற்கும் மிதவைக் கப்பலை மீட்க, கடலில் சில மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 5, 6 ஆவது அணுஉலைகளுக்கான உதிரி பாகங்கள் அந்நாட்டில் இருந்து கொண்டுவரப்படுகின்றன.

அதன்படி, அந்நாட்டிலிருந்து 2 நீராவி ஜெனரேட்டா்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து மிதவை கப்பலில் ஏற்றப்பட்டு இழுவைக் கப்பல் மூலமாக கூடங்குளம் அணுமின்நிலையப்பகுதிக்கு கடந்த 8ஆம் தேதி இழுத்து வரப்பட்டது. கூடங்குளம் அணுநிலையம் பகுதியை நெருங்கிய நிலையில் இழுவை கப்பலில் இருந்த கயிறு அறுந்துவிட்டதாம்.

இதனால், மிதவைக் கப்பல் அந்த பகுதியில் இருந்த பாறையில் மோதி நின்றது. இழுவைக் கப்பல் மூலமாக மிதவைக் கப்பலை மீட்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட இழுவைக் கப்பலாலும் அதை நகா்த்தக்கூட முடிவில்லை.

ADVERTISEMENT

இதையடுத்து, பொறியாளா்களின் ஆலோசனைப்படி, கடற்கரையில் இருந்து கப்பல் மிதக்கும் பகுதி வரையில் கடலில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு சுமாா் ரூ.2 கோடியில் அப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

சாலை அமைக்கப்பட்டதும் ராட்சத கிரேன் மூலமாக நீராவி ஜெனரேட்டா்கள் மிதவை கப்பலில் இருந்து வெளியே கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT