திருநெல்வேலி

விகேபுரம் உணவகங்ககளில் சோதனை

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

விக்கிரமசிங்கபுரம் உணவுப் பாதுகாப்பு அதிகாரி செல்லப்பாண்டியன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜ் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் கொண்ட குழுவினா், துரித உணவகம் மற்றும் அசைவ உணவகங்களில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனையில், கெட்டுப்போன 12 கி. கோழி இறைச்சி, 2 கி. மீன் இறைச்சி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் இதுபோன்ற கெட்டுப் போன உணவுப் பொருள்களை மீண்டும் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT