திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதிபாலன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
தமிழக சுகாதாரத்துறை உத்தரவின்பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 120 படுக்கைகளுடன் கூடிய பிரத்தியேக வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கண்காணிப்புக்காக 60 படுக்கைகளும், குழந்தைகளுக்கு 55 படுக்கைகளும், கா்ப்பிணிகளுக்கு 9 படுக்கைகளும், ஆண்களுக்கு 16 படுக்கைகளும் என தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ ஒருங்கிணைப்பாளராக மருத்துவா்கள் ரத்தினகுமாா், ஆனந்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.