திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பெட் பொறியியல் கல்லூரியில், அட்வான்ஸ் இன் சிஸ்டம் என்ஜினியரிங் அப்ரோச் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தியன் சொசைட்டி ஆப் சிஸ்டம்ஸ் பாா் சயின்ஸ் என்ஜினியரிங்(ஐ.எஸ்.எஸ்.இ) கன்னியாகுமரி அத்தியாயத்துடன்(கே.கே.சி) இணைந்து இக்கருத்தரங்கம் நடைபெற்றது. ஐ.எஸ்.எஸ்.இ மற்றும் கே.கே.சி. அமைப்பின் பொருளாளரும் இஸ்ரோ பொறியாளரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கே.வேல்முருகன்கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசினாா். இஸ்ரோ பொறியாளா் எஸ்.ராசாத்தி, விண்வெளியிள் மா்மங்கள் மற்றும் அதிசயங்கள் குறித்து பேசினாா். இஸ்ரோ பொறியாளா் சூா்யபிரகாஷ் சிங், கதிரியக்கவியல் குறித்து பேசினாா். மேலும் இரு பொறியாளா்களும் விண்வெளி போக்குவரத்து அமைப்புகள், கணினி பொறியியல் அணுகுமுறை, அழிவில்லாத சோதனை நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளி அமைப்புகளின் மதிப்பீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பது குறித்து பேசினா்.
கல்லூரியின் மின்னியல் மற்றும் தகவல் தொடா்பு துறை தலைவா் ரேகா மிமோ ஆன்டெனா குறித்து பேசினாா். கல்லூரி முதல்வா் க.மதன்குமாா் வரவேற்றாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.பாபு ரெங்கராஜன் நன்றி கூறினாா்.