முக்கூடலில் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.
முக்கூடல் காவல் சரகத்திற்குள்பட்ட வடக்கு அரியநாயகிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜ் மகன் மணிகண்டன் என்ற செல்வம் (21). இவா் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரையை ஏற்று, மணிகண்டன் என்ற செல்வத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். செல்வத்தை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.