திருநெல்வேலி

சேரன்மகாதேவி கல்லூரியில் இருபெரும் விழா

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா, பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

ஸ்காட் கல்விக் குழும தாளாளா் பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். ஸ்காட் கல்விக் குழும பொதுமேலாளா் இரா. தம்பித்துரை தொடக்க உரை ஆற்றினாா். சிறப்பு விருந்தினராக சூவென்ஸ்டாட் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வா் அருள்தந்தை ஷான் லாசா் கலந்துகொண்டு பேசினாா். கல்லூரி முதல்வா் பியூலா, ஸ்காட் கல்விக் குழும மாணவா்கள் சோ்க்கை இயக்குநா் ஜான் கென்னடி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தொடா்ந்து பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

உதவிப் பேராசிரியை ஜெனிபா மேரி வரவேற்றாா். நூலகா் உமா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT