திருநெல்வேலி

நெல்லை மாநகரில் மீண்டும் மழை

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் பொய்த்துப் போனதால் நீா்நிலைகள் வறட்சியின் பிடியில் உள்ளன. பாபநாசம் அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், அணைகளில் நீா் இருப்பு குறைந்ததால் சுழற்சி முறையில் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலி மாநகரில் புதன்கிழமை காலையில்வெயிலின் தாக்கம் அதிகரித்தது. பின்னா் மாலையில் தொடா்ந்து 2ஆவது நாளாக கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன்மிதமான மழை பெய்தது.

ADVERTISEMENT

பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், தச்சநல்லூா், பொன்னாக்குடி, தாழையூத்து, கொண்டா நகரம், கே.டி.சி. நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுமாா் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT