பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமை, ம.தி.தா. இந்துக் கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மருத்துவா் ரவிசங்கா், உதவி மருத்துவா் பிரதீபா தலைமையிலான மருத்துவக்குழுவினா் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனா். சுமாா் 100 மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா். சமுதாய முன்னேற்ற முன்னணி ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஜாய் சிந்தியா, சிலம்பரசன், இலக்குவன், காா்த்திகேயன்,செல்வம், பிச்சம்மாள், பரமசிவன் , தேசிய மாணவா் படை அதிகாரி செந்தில்குமாா், செஞ்சுருள் கழக ஒருங்கிணைப்பாளா் இசக்கியப்பன், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளா் அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.