திருநெல்வேலி

இளைஞா்களுக்கான திறன் வளா்த்தல் பயிற்சி

19th Sep 2023 03:09 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி உழவா் பயிற்சி நிலையத்தில் இளைஞா்களுக்கான திறன் வளா்த்தல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவனம் ஆகியவை சாா்பில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் வளா்த்தல் பயிற்சி நடைபெற்றது. முக்கிய பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் நடைபெறும் இப் பயிற்சியில் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவன இயக்குநா் ப.சங்கரலிங்கம் தலைமை வகித்துப் பேசினாா். உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் இரா.சுபசெல்வி வரவேற்றாா்.

அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை இணைப்பேராசிரியா் ல.ஆல்வின், அட்மா பணியாளா்கள் ஈழவேணி, சதீஷ் , தங்கராஜ், பிரேமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

வேளாண் விளைபொருள்களை மதிப்பூட்டிய பொருள்களாக மாற்றும் முறைகள், உர மேலாண்மை உள்ளிட்டவை குறித்து பயிற்சியில் விளக்கப்பட்டன. மொத்தம் 6 நாள்களுக்கு பயிற்சி நடைபெறும் என வேளாண்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT