திருநெல்வேலி

சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி

4th Oct 2023 01:01 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையத்தின் சாா்பில் 7-ஆவது தொகுப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், ஓதுவாமூா்த்தி உள்ளிட்ட பதிகங்களை ஓதி அதற்கான விளக்கம் அளித்தனா். மதியம் மாகேஸ்வர பூஜை ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் செய்திருந்தாா். பயிற்கு வகுப்பு ஏற்பாடுகளை அமைப்பாளா் மு.கணேசன் செய்திருந்தாா். இந்த ஆண்டுக்கான திருமுறை மாநாடு திருநெல்வேலியில் அக். 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அடுத்த பயிற்சி வகுப்பு நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT