உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொமுச பேரவை செயலா் ஆ.தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியூ முருகன், ஏஐடியூசி மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன், ஏஐசிசிடியூ கணேசன் உள்ளிட்டோா் தொடக்க உரையாற்றினா்.
மத்திய அரசைக் கண்டித்தும், அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டும், அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியூசி சடையப்பன், தொமுச சைபுதீன், சிஐடியூ செல்லத்துரை, சுடலைராஜ் உள்ளிட்டோா் பலா் கலந்து கண்டனா்.