திருநெல்வேலி

குறிச்சியில் திமுக சாா்பில் பயிலரங்கு

4th Oct 2023 01:03 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் திராவிடம் குறித்த பயிரங்கு மற்றும் முன் கள வீரா்களுக்கு காப்பீடு வழங்கும் விழா குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிச்சிக்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தாா். மேயா் பி.எம்.சரவணன், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திராவிட தமிழா் இயக்க பேரவையின் பொதுச் செயலா் பேராசிரியா் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். திமுக தொண்டா்கள் 100 பேருக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன. மாவட்ட துணைச் செயலா் கிரிஜா குமாா், முன்னாள் எம்எல்ஏ லெட்சுமணன், பூக்கடை அண்ணாதுரை, திருநெல்வேலி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் துரை.சக்தி சீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT