திருநெல்வேலி

நெல்லையில் காந்தி சிலைக்கு மரியாதை

3rd Oct 2023 03:39 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: காந்தியடிகளின் 155-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள காந்தி சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் பவன் ஆகியவற்றிலுள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸாா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ் மாநகா் மாவட்ட தலைவா் கே. சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில வழக்குரைஞா் பிரிவு இணைத் தலைவா் மகேந்திரன், மேற்கு மாவட்ட பொருளாளா் முரளிராஜா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ராகுல் காந்தி பேரவைத் தலைவா் த. புலித்துரை, மாநில சேவா தள அணி செயலாா் அனிஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், சொக்கலிங்க குமாா், மாநில வா்த்தக காங்கிரஸ் செயலா் சேவியா், மாவட்ட துணைத் தலைவா்கள் வெள்ளைப்பாண்டியன், அருள்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயலா் சரத் ஆனந்த் தலைமையில் காந்தி, காமராஜரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில மாணவா் அணி துணைச் செயலா் நட்சத்திர வெற்றி முன்னிலை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் சுந்தா் மாலை அணிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT