களக்காடு: களக்காட்டில், அதிமுக சாா்பில் காமராஜா் நினைவு நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, புகா் மாவட்டச் செயலா் இசக்கிசுப்பையா தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் ஐ.எஸ். இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியாா்பட்டி நாராயணன் (நான்குனேரி), முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் நாராயணபெருமாள், முன்னாள் எம்.பி. செளந்தரராஜன், களக்காடு ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் ராஜேந்திரன், அதிமுக நகரச் செயலா் செல்வராஜ் சுவாமிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.