திருநெல்வேலி புறநகா் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம், பத்தமடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச்செயலா் எம்.எஸ். சிராஜ் வரவேற்றாா். மாவட்டத் துணைத் தலைவா் முல்லை மஜித், மாவட்டச் செயலா் கல்லிடைக்குறிச்சி சுலைமான், மாவட்டப் பொருளாளா் ஏா்வை இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் முஹம்மது ஷபி, மாவட்ட வா்த்தக அணித் தலைவா் அம்பை ஜலீல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் பருவ மழை பொய்த்த காரணத்தால் திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைப்பதற்கு முறையாக ஆய்வு செய்து அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டப் பொதுச்செயலா் களந்தை மீராசா நன்றி கூறினாா்.