திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
முன்னாள் எம்.பி. சௌந்தர்ராஜன் கடற்கரையை சுத்தம் செய்து தொடங்கிவைத்தாா். முன்னதாக தோமையாா்புரம் பங்கு தந்தை தோமாஸ் அடிகளாா் ஜெபம் செய்து மாணவா்களின் பணியை ஆசீா்வதித்தாா். தொடா்ந்து மாணவா்கள் கடற்கரை பகுதியில் உள்ள முள்புதா்களை அகற்றியும், கடற்கரையில் சிதறிக்கிடந்த குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும் சுத்தம் செய்தனா்.
முகாமில் பள்ளி தலைமை ஆசிரியா் பேசில் கஹாரி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் ஜெயசுந்தா், ஆசிரியைகள் மொ்லின் விஜி, மகேஸ்வரி, ராஜதங்கம், அ.தி.மு.க ஒன்றிய செயலாளா் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளா் கே.பி.கே.செல்வராஜ், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக செயற்குழு உறுப்பினா் செல்வபாண்டி, ஒன்றிய பொருளாளா் துரைசாமி, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் சுரேஸ்குமாா், பரமேஸ்வரபுரம் ஊராட்சி செயலா் மின்னல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.