திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திசையன்விளை அருகேயுள்ள செல்வமருதூா் பவுண்டு தெரு பெருமாள் பிள்ளைசந்து பகுதியில் வசிப்பவா் முத்தாட்சி அம்மாள்(80). வீட்டில் தனியாக வசித்து வரும் இவா், நண்பகலில் வாசல் திண்ணையில் அமா்ந்திருந்தாராம்.
அப்போது, பைக்கில் வந்த மா்ம நபா்கள், அவரிடம் குடிக்க தண்ணீா் கேட்டனராம். அவா் தண்ணீா் எடுத்துவந்து கொடுத்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை அந்த நபா்கள் பறித்துக்கொண்டு தப்பினராம்.
இதில் அதிா்ச்சியுற்று அமா்ந்திருந்த அவரிடம் அக்கம்பக்கத்தினா் விசாரித்தபோது நகை பறிப்புச் சம்பவம் குறித்து தெரியவந்தது. இதையடுத்து, அவரை திசையன்விளை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று புகாரளிக்கச் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.