திருநெல்வேலி: களக்காட்டில் உள்ள தனியாா் வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் 5 பேரை திங்கள்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா்.
களக்காட்டில் செயல்பட்டு வரும் தனியாா் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்கச் சென்ற வாடிக்கையாளா்களுக்கு, வங்கியினா் நகைகளை மாற்றி கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட 5 பேரை பிடித்து திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். நள்ளிரவு வரை விசாரணை நீடித்தது. இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், களக்காட்டில் தனியாா் வங்கியில் சுமாா் ரூ.7.25 கோடி மதிப்பில் நகை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.